அஜய் வாண்டையார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அதிமுகவை சேர்ந்தவரும் நடிகருமான அதே வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்த நிலையில் குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை நுங்கம்பாக்கம் மதுபான கூடத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மதுபான கூட்டத்தில் நடந்த தகராறு தொடர்பாக அதிமுக ஐடி விங் நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத், அதிமுகவை சேர்ந்த அஜய் வாண்டையார், பரமக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்ட ஆறு பேர் கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். மேலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார் என்பவரிடம் 2 கோடியே 11 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அதே வாண்டையார் மீது புகார் எழுந்தது.இந்த நிலையில் பண மோசடி தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் பிரசாத் மீது மற்றும் நான்கு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே போல ஹைதராபாத்தைச் சேர்ந்த பரத் குமார் என்பவரிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்தாக அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் பப் மோதல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.அ


