பல ஆண்டுகளுக்கு பின் விளம்பரத்தில் நடித்த அஜித்..!! புகைப்படம் வைரல்..!
அஜித் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும், பொதுநிகழ்ச்சிக்கும் வருவதில்லை. திரைக்கு வெளியே அவரைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர் பல வருடங்கள் முன்பு நெஸ்கஃபே காபி விளம்பரத்தில் நடித்தார். இதில் அவருடன் சிம்ரனும் நடித்திருந்தார். சால்ட் அண்ட் பெப்பர் போன்ற எதையும் அப்போது அவர் முயற்சி செய்திருக்கவில்லை என்பதால் ஸ்மார்ட்டாக இந்த விளம்பரத்தில் தோன்றினார். அஜித்துக்காகவே இந்த விளம்பரத்தை பார்வையாளர்கள் ரசித்தனர். ஒப்பந்தம் காலாவதியானதும் விளம்பரத்திலிருந்து அஜித் விலகிக் கொண்டார். பிறகு சூர்யாவும், ஜோதிகாவும் இந்த விளம்பரத்தில் நடித்தனர்.
விஜய் ஜோஸ் ஆலுக்காஸ், கோக், டாடா டொகோமோ என பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இதில் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் அமலா பாலுடனும், பகத் பாசிலுடனும் நடித்திருக்கிறார். தனது அம்மா ஷோபாவுடன் அவர் வரும் விளம்பரம் சென்டிமெண்டாக நான்றாகவே வொர்க் அவுட்டானது.
இந்நிலையில், தற்போது அஜித் கார் ரேஸ் குழுவுக்கு பிரபல குளிர்பான தனியார் நிறுவனம் ஸ்பான்சர் வழங்குகிறது. இதற்காக, அந்த குளிர்பானத்தை கையில் ஏந்தியவாறு உள்ள அஜித்தின் புகைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானதால், அது வைரலாகிறது.
அஜித்குமார் ரேஸிங் அணி கேம்பா குளிர்பான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பெப்சி, கோலா வருகைக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த கேம்பா நிறுவனத்தை கடந்தாண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இதை மீண்டும் புத்துயிர் பெற வைக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், கேம்பாவை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக, அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஜித்குமார் கேம்பா குளிர்பானத்திற்காக தற்போது விளம்பரத்தில் நடித்துள்ளார். கேம்பா குளிர்பானத்தை கையில் ஏந்தியவாறு உள்ள அஜித்தின் புகைப்படம் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


