மலேசியா முருகன் கோவிலில் அஜித் சாமி தரிசனம்..!
Dec 3, 2025, 06:25 IST1764723309000
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24 எச் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில், 24 எச். சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்து மலை முருகன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


