மது பிரியர்கள் ஷாக்..!! டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு..!!
Mar 24, 2026, 13:42 IST1774339951864
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மது கடை பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மது விற்பனை, முழு கணினிமயமாக்க திட்டம் வழியே தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு ரசீதில், 4.50 லிட்டர் இந்தியாவில் உற்பத்தியாகும் மது வகைகள், 7.80 லிட்டர் பீர், 4.50 லிட்டர் வெளிநாட்டு மது வகைகள், 9 லிட்டர் ஒயின் ஆகியவற்றுக்கு மேல் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. இதை பணியாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருவருக்கு ஒரு ரசீதில் 25 குவாட்டர் அல்லது 12 ஆப் அல்லது 6 புல் பாட்டில் மது வகைகளையும், 12 பீர் பாட்டில்களையும் வழங்க முடியும்.

