மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு

 
ச்

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்திலிருந்து காலியாகும் ஆறு உறுப்பினர் பதவிக்கு வரும் மார்ச்  16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக சார்பில் தம்பிதுரையும், கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாசும் போட்டியிட்டனர். திமுக சார்பில் திருச்சி சிவாவும் கான்ஸ்டைண்டைன் ரவீந்திரனும் போட்டியிட்டனர். அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும், தேமுதிக சார்பில் சுதீசும் களம் கண்டனர். மொத்தமாக 12 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் அதில் தகுதியற்ற ஆறு பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் போட்டியிட்ட ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்தார். 

வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் தம்பிதுரை, தேமுதிகவின் சுதீஷ் காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் தங்களின் சான்றிதழ்களை பெற்றனர்.