"இது தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கு" - செல்வப்பெருந்தகை கண்டனம்!!

 
selvaperunthagai selvaperunthagai

வருமான வரித்துறை காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதற்கு செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசிச பா.ஜ.க.வின் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறை காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். 

congress

தேர்தல் பத்திரங்கள் மூலம் வருமானத்தை வாரி குவித்த பா.ஜ.க. விற்கு உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதம் என்று நேற்று (16.02.2024) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கொடுத்ததிலிருந்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நோக்கில் பொதுமக்களிடம் திரள்நிதி சேர்த்த வங்கிக் கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றுப்போய்விடுவோம் என்று உறுதியாக தெரிந்ததால், இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பாஜக. 

selva perunthagai

இது ஆளும் பா.ஜ.க. அரசின் ஆணவ, அராஜகப்போக்கைக் காட்டுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆளும் பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கை கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தக்க பதிலடி தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.