"மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!

 
tn

மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

tn

வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் எச்சரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பாதிப்புகளை சரிசெய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

tn

அதன்படி, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எச்சரிக்கை வழங்கி நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்; முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும். சமையல் கூடங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க  மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும், புயலின் சீற்றத்தால் விழும் மரங்களை உடனடியாக அகற்ற, போதிய வாகனங்களுடன் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்,  அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.  அதில் கவனம் செலுத்த வேண்டும்; மழைக்காலத்தில் ஏற்படும் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும் என்றார்.