நாளை ரேஷன் கடைகள் இயங்கும்...லீவு கிடையாது!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் நாளை (மே 26) ) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் நியாய விலைக் கடைகளும், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவை முக்கியப் பங்காற்றி வருகிறது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா , மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மே மாத சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களின் இயக்கத்தினை, உரிய காலத்திற்குள் முடிக்க, அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 26ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது; அதற்கு ஈடான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


