வருமான வரித்துறை சோதனை - அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அதிரடி உத்தரவு

 
tb

அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில்  நேற்று முன்தினம்  காலை  வருமான வரித்துறையின் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அண்மையில் நடைபெற்று முடிந்த பத்திரப்பதிவுகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  30 லட்சம் ரூபாய்க்கு மேலான பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த சோதனையானது விடிய விடிய சுமார் 17மணி நேரத்தை கடந்தும் நீடித்து, நேற்று அதிகாலை சோதனையை முடிந்தது.  இந்த ஆய்வில் கணக்கில் காட்டப்படாத பல சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், மொத்தம் ரூ.2,000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரப்பதிவு ஆபிசில் நடந்த ஐடி ரெய்டு.. வசமாக சிக்கிய பெரும் புள்ளிகள்..?  கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் என தகவல்..!! - Update News 360

இதுகுறித்து கூறியுள்ள பதிவுத்துறை, திருச்சி உறையூர், திருவள்ளூர் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த ஐ.டி ரெய்டு - உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. 2017-2018 ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் கோரப்பட்ட நிலையில் வழங்கப்பட்டன .

ஆவணம் பதிவுக்கு முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதார்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது.

tn

ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்  என்று தெரிவித்துள்ளது.