‘இவர்கள் ஓட்டு எல்லாம் நிச்சயம் விஜய்க்குதான்’.. அப்படி ஒரு வாக்குவங்கியும் இருக்கா?? - கார்த்தி சிதம்பரம் தகவல்..

 
இன்ஸ்டகிராமில் பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருக்கும் பெண்கள் ஓட்டு விஜய்க்குதான் - கார்த்தி சிதம்பரம்..!! இன்ஸ்டகிராமில் பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருக்கும் பெண்கள் ஓட்டு விஜய்க்குதான் - கார்த்தி சிதம்பரம்..!!

விஜய்யின் தவெகவுக்கு,  இன்ஸ்டகிராமில் பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருக்கும் பெண்களின் ஓட்டு கணிசமாக கிடைக்கும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி., தெரிவித்துள்ளார்.  

தனியார் ஊடகம் ஒன்றிற்கு தான் அளித்த பேட்டி குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி., “விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார்.  விஜயின் தவிக்க கட்சிக்கு ஒரு எனர்ஜி இருக்கிறது. அந்தக் கட்சிக்கு மற்றவர்கள் சொல்வதை விட, கணிசமான ஓட்டு நிச்சயம் கிடைக்கும். பலதரப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பேசுவதை வைத்து ஒரு சமூக பார்வையில்  சொல்கிறேன், நிச்சயம் தவெக-விற்கு ஒரு எனர்ஜி இருக்கிறது;  தமிழகத்தில் எப்போதும் திமுக அதிமுகவுக்கு மாற்று என விரும்புபவர்களின் கவனமும் தவெக பக்கம் திரும்பும். விஜய் ஒரு பாப்புலரான திரைப்பட நடிகர் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

”ஏன் ஜி, தமிழ்நாடு, தமிழர்கள்னாலே அலெர்ஜி”.. தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சார் - ரைமிங்காக பேசிய விஜய்

தவெக-வுக்கென வேறுபட்ட சித்தாந்தங்கள்;  வேறுபட்ட சிந்தனைகள் மற்றும் வேறுபட்ட திட்டங்கள் என எதுவும் கிடையாது.  ஆனால் விஜயின் ரசிகர்கள் மற்றும் திமுக அதிமுகவிற்கு மாற்றமான ஒரு கட்சி என்கிற பார்வை மற்றும் மத்தியில்  இருக்கும் பாஜகவை எதிர்க்கும் போக்கு ஆகியவை அந்த கட்சிக்கான ஆதரவை கூட்டி இருக்கிறது. இளம் தலைமுறையினருக்கு எப்போதும் அரசியல் பிடிக்காது, இவர் ஒரு மிகப்பெரிய நடிகர் என்பதாலும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விட கூடுதல் வாக்குகள் தவெகவிற்கு  கிடைக்கும் .  ஆனால் கிடைக்கும் வாக்குகள், தாவிகாவிற்கு சீட்டாக மாறுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அமைப்பு ரீதியாக ஒரு தேர்தலை சந்தித்து,   மக்கள் எனர்ஜியை  ஓட்டாக மாற்ற முடியுமா என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது.   தவெகவிற்கு கூடுதல் ஆதரவு  வெற்றியாக மாறிவிடாது.  வெற்றி என்பது திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டும் தான் வெற்றி வரும். 

கார்த்தி சிதம்பரம்

தவெக வெற்றிபெறாவிட்டாலும், கணிசமாக ஓட்டு வாங்குவார்கள்;  ஆனால் யாருடைய ஓட்டை வாங்க போகிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை. அரசியல் விமர்சனகளின் கருத்துப்படி சீமானின் ஓட்டு அதிகமாக விஜய்க்கு செல்லும் என்கிறார்கள்.  அண்ணாமலையின் சமூக வலைதள பக்கங்களை பார்ப்பவர்கள் பாஜகவில் இருந்து திரும்பி விஜய் பக்கம் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. முதல் தலைமுறை வாக்காளர்கள் விஜய்க்கு வாக்களிக்க அதிகம் வாய்ப்புள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமில் பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் பெண்கள் ஓட்டு தவெகவிற்கு  கிடைக்கும். 

 ஏனெனில் எந்த அரசியல் கட்சிகளும் ஒரு 18 முதல் 25 வயதிலான பெண்களிடம் அரசியல் குறித்து பேசுவது கிடையாது.  அவர்களுடைய மன நோக்கம் என்ன என்பதும், அவர்கள் எந்த மாதிரியான சமூக வலைத்தள  செயல்பாடுகளை கொண்டுள்ளார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆகையால் விஜய் ஒரு நடிகர் என்பதால் இத்தகைய பெண்களின் வாக்கு அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அந்த தலைமுறை பெண்கள் புதிதாக வரும் ஒருவருக்கு ஆதரவு அளிக்க அளிப்பார்கள். அதற்கு இன்ஸ்டாகிராம் பிரைவேட் அக்கவுண்ட் ஓட் பேங்க்(வாக்கு வங்கி) என்று நான் பெயர் வைத்துள்ளேன். கண்டிப்பாக அந்த ஓட்டுகள் விஜய்க்கு செல்லும்.” என்று தெரிவித்திருக்கிறார்.