விஜயுடன் கூட்டணி- NO சொன்ன ராகுல்
Nov 21, 2025, 17:36 IST1763726818851
தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

டெல்லியில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுகவுடன் கூட்டணியை தொடர கார்கே மற்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றையும் அமைத்துள்ளது. கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் குழுவில் இருக்கின்றனர். விஜய்- ராகுல் நட்பு பற்றி காங்கிரஸ் தலைவர்கள் கடந்த சில நாட்களாக பேசிவந்த நிலையில், விஜய்க்கு காங்கிரஸ் தலைமை No சொல்லியது.


