மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு

 
kamal hassan

தேசத்தின் நலனில் அக்கறை கொண்டு இயங்கும் கட்சிகளோடு மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7வது ஆண்டுவிழாவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசிய போது, " முழுநேர அரசியல்வாதி என ஒருவனும் கிடையாது.. முழுநேர அப்பனும் கிடையாது, கணவனும் கிடையாது, பிள்ளையும் கிடையாது.. அவனவனுக்கு |8 மணிநேரம் வேலைக்கு போக வேண்டும்,  8 மணிநேரம் தூங்க வேண்டும். 4 மணிநேரம் வீட்டில் இருந்தாக வேண்டும். சினிமாவில் மக்கள் கொடுத்த அன்புக்கு மீண்டும் வட்டியை திருப்பித் தர வேண்டும், அதற்குத்தான் அரசியலுக்கு வந்தேன். கட்சி நடத்துவது எல்லாமே நான் சம்பாதித்த பணத்தில்தான். இவ்வளவு திமிரோடு பேசுகிறேனே என நினைக்காதீர்கள்.. இந்த திமிர் எல்லாம் பெரியாரிடம் இருந்து வந்தது. 

kamal

திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்று கொண்டேன். நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன். என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்... போக வைப்பது அதை விட கஷ்டம். கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை..நஷ்டம் தான். முதலில் தேசம், தமிழ்நாடு; அதற்கு அடுத்து தான் மொழி; தேர்தலில் வாக்கு செலுத்த  மக்கள் பணம் வாங்கக்கூடாது; விஜய் முழுநேர அரசியல்வாதியாக வருவேன் என்று அறிவித்திருப்பது விஜய்-ன் அரசியல் பாணி; மக்கள் நீதி மய்யத்தின் தோல்வியை விட மிக முக்கியமானது. தேர்தலில் வாக்கு செலுத்தாமல் இருப்பது தான். அதுவே ஜனநாயகத்தின் தோல்வி.  நல்ல செய்தி உடனே வந்து விடாது. கெட்ட செய்தி தந்தியில் வரும். நல்ல செய்தி கடிதத்தில்தான் வரும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. இறுதியானவுடன் கூறுகிறேன் ” என்றார்.