இந்திய கம்யூனிஸ்ட்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

 
tn

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

mutharasan

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் இறுதி செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடாளுமன்ற தேர்தல் - 2024 நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திராவிட  முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (29.2.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு.கழகமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 (இரண்டு) தொகுதிகளில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது என்று திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.