புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
புதிதாக பொறுப்பேற்றுள்ள 4 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவிடம் இருந்து தட்டிப்பறித்து மீண்டும் ஆட்சி அமைத்தது திமுக, 3 ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டை நோக்கி திமுக ஆட்சி சென்று கொண்டுள்ளது. இந்த 3 ஆண்டில் அமைச்சர் நாசர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சராக உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா இடம்பெற்றனர். அதே நேரத்தில் ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்ட நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவியும், அமைச்சர் பதவி பெற்ற உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று புதிதாக பொறுப்பேற்ற இரா.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை, கோவி. செழியனுக்கு உயர்க்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. நாசர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேபோல் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சார மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.