அல்போன்சா மாம்பழமும், பாஜக இலக்கும் - முன்னாள் தேர்தல் ஆணையரின் நய்யாண்டி!!

 
tn


வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருகிறார்கள். பிரதமர் மோடி ,  பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறிவரும் நிலையில் இது சாத்தியமா? அல்லது பாஜகவிற்கு  இதற்கான செல்வாக்கு இருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.  கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

modi

கடந்த தேர்தல் வாக்கு சதவீதங்களில் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணியை வாக்கு வங்கியில் செல்வாக்கு மிக்கதாக உள்ள நிலையில்,  கடந்த 10  ஆண்டுகள் மோடி ஆட்சியில் மக்களின் திருப்தி, அதிருப்தி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இந்த தேர்தலின் வாக்கு சதவீதங்கள் நிர்ணயிக்கப்படும் . இருப்பினும் பாஜக நிர்ணயித்துள்ள 400க்கும் மேற்பட்ட தொகுதிகள் என்ற இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி தனது சமூக வலைதள பக்கத்தில் , இப்போது இப்போது 400+ என்பார்கள் . மே மாத இறுதியில் 250 க்கு சரியும்.  ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200க்கு வந்துவிடும்.  நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழத்தின் விலையை சொன்னேன் என்று நய்யாண்டியாக ட்வீட்  செய்துள்ளார்.