"ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
tn

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

anbil-mahesh-3

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் NEET, JEE ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை;

anbil magesh

இதில் ₹4.27 கோடி செலவினத்தைத் தவிர்த்திருக்கலாம் எனவும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா ₹55,000 செலவில் வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018, 19 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ₹3.18 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு வழங்கிய வழிகாட்டி புத்தகமும் பயன்படுத்தாததால், ₹2.15 கோடி செலவில் வழிகாட்டி புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.