இளையராஜா விவகாரம்- நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்?: அமீர்

 
அமீர் அமீர்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ச்


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நேற்று தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர், மணவாள மாமமுனிகள் ஜீயர் மற்றும் இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் தரிசனம் செய்தனர். அப்போது இளையராஜா அர்த்தமண்டபத்திற்குள் சென்று பின்பு அவருக்கு அந்த விஷயம் தெரிவிக்கப்பட்ட உடன் அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறி வாசல் படியில் அருகே நின்று கோவில் மரியாதையை பெற்றுக்கொண்டார். கோவிலின் அர்த்த மண்டபத்திற்குள் முதலில் சென்ற பின்பு எதிர்ப்பு தெரிவித்த உடன் அங்கிருந்து வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்த இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வண்மையாக கண்டிக்கிறேன்… அமீர்


இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் அமீர், “சனாதனம் தலை விரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.