தென் சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை

 
amit shah

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர். இந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் தமிழக தேர்தல் களத்தில் தமிழக பாஜகவினர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக வலுவாக உள்ள தொகுதிகளை குறிவைத்து பரப்புரை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுள்ளது. தென் சென்னை நாடாளுமன்றத்தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் பாஜகவின் செல்வாக்கை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.