கூட்டணி ஆட்சினு அமித்ஷா சொல்லவில்லை.. பாமக கூட்டணிக்கு வந்தால் அதைப்பற்றி பார்க்கலாம் - இபிஎஸ்..!!
தமிழகத்தை பொறுத்தவரை என்.டி.ஏ கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை என்றும், கூட்டணியில் தான் எடுப்பது தான் இறுதியான முடிவு என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார். கூட்டணி ஆட்சி என அவர் சொல்லவில்லை. அமித்ஷா சொல்வதை திரிக்க கூடாது. எங்கல் கூட்டணியில் பாஜக உள்ளது. இன்னும் சில கட்சிகள் உள்ளன. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.

கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை. கூட்டணியில் நான் எடுப்பதுதான் முடிவு.. அதுமுக கூட்டணியில் பாமக இல்லை.. அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். அதிமுக கூட்டணிக்கு பமக வந்தால், அதன்பிறகு ஆட்சியில் பங்கு குறித்து கேளுங்கள். ” என்று தெரிவித்தார். முன்னதாக என்.டி.ஏ கூட்டணியில் பாமக இருப்பதாக கூறியிருந்த பழனிசாமி, தற்போது பாமக கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு குறித்து பார்க்கலாம் என மழுப்பலாக பதிலளித்தார்.


