அமித்ஷா பேசியது "அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாதப் பிளவு பேச்சு.." - ஆ.ராசா கடும் தாக்கு..!!

 
  ஆ.ராசா    ஆ.ராசா

 தமிழ்நாட்டை பார்த்து பயந்ததால் தான் 5 முறை பிரதமர் இங்கு வந்து பரப்புரை செய்தார் என்றும், தமிழ்நாட்டில்  கலவரத்தை தூண்ட அமித்ஷா முயற்சிப்பதாக  திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.  

சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார் அமித்ஷா.  அமித்ஷாவின் மொத்த பேச்சை சுருக்கி சொல்வதென்றால்  அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாதப் பிளவு பேச்சு..  இதைத் தவிர அவரது பேச்சில் வேறு எதுவும் இல்லை. 

அமித்ஷா

அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில்  கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை கெடுக்கப் பார்க்கிறார்.  தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை அமித்ஷா விரும்பவில்லை. மதவாத பிளவை வேண்டுமென்று உருவாக்கி  கலவரத்தை உருவாக்க பார்க்கிறார். தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான விவாதத்திற்கு அமித்ஷா தயாரா? டெல்லியிலா? சென்னையிலா? புவனேஸ்வரிலா? எங்கு வேண்டுமானாலும் நான் வருகிறேன். ஆனால் இந்தியில் மட்டும் பேசாதீர்கள்.

தமிழ்நாட்டை பார்த்து பயந்ததால் தான் 5 முறை பிரதமர் இங்கு வந்து பரப்புரை செய்தார்.  பாஜக எது செய்தாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை என்பதால்தான் பயப்படுகின்றனர்.  மதவாத பிளவை உண்டாக்கி கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்.  ஆதாரம் இல்லாத  குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அமித்ஷா நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்..