அமித்ஷாவா? சந்தானபாரதியா? பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆகிட்டாங்க போலயே...!!

 
tn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ் நாட்டை நோக்கி படையெடுத்துள்ளனர்.  மாநில தலைவர்கள்  முதல் தேசிய தலைவர்கள் என தமிழ்நாட்டைச் சுற்றி பம்பரமாக சுழன்று வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். 

amitshah
 வழக்கமாக தமிழகத்தில் இருமுனைப் போட்டி இருக்கும்.  ஆனால் இந்த முறை பாஜக தலைமையில் கூட்டணி அமைந்து மும்முறை தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.  முதல்வர் ஸ்டாலின் தமிழக முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ராகுல் காந்தியுடன் இணைந்து பரப்புரை மேற்கொள்கிறார்.  பிரதமர் மோடி ஐந்து முறைக்கு மேல் தமிழகம்  வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.  வருகிற 15ஆம் தேதியும் மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  நிர்மலா சீதாராமன் , ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


 இந்த சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  இதன் காரணமாக பாஜகவினர் அமிஷாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.  மீண்டும் மோடி மீண்டும் மோடி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருக வருக என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அமித்ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக இயக்குனரும்,  நடிகருமான சந்தான பாரதியின் புகைப்படத்தை வைத்து போஸ்டர் அடித்துள்ளனர்.  இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  குறிப்பாக  கார்த்திக் சிதம்பரம் இந்த புகைப்படத்தை பகிர்ந்து சந்தான பாரதி ஃபேன் கிளப் என்று போட்டு நக்கல் அடித்துள்ளார்.