காரைக்குடியில் அமித்ஷாவின் வாகன பேரணி ரத்து

 
tn tn

காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்தாகியுள்ளது.

Bihar amitsha

 மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தமிழ்நாடு வரும் நிலையில் காரைக்குடியில் அவர் பங்கேற்க இருந்த வாகன பேரணி   ரத்தாகியுள்ளது. பாஜகவின் ரோடு ஷோவுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை என கூறப்படும் நிலையிலும், சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் 525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

amitshah

இருப்பினும் மதுரையில் நாளை நடைபெறும் வாகனப் பேரணியில் திட்டமிட்டபடி அமித் ஷா பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை இரவு 7.30 மணி அளவில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார். காரைக்குடி வாகனப் பேரணி ரத்து செய்யப்பட்ட நிலையில் திருமயத்தில் உள்ள சிவன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.