அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றத்திற்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்!!

 
eps


தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தொடர்ந்து இயங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

eps

இன்னைலியில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  அம்மா உணவகங்களை திமுக மூட முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க அம்மா உணவகம் வழிவகுத்தது.  அதை முடக்க திமுக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  திமுக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதிமுக அரசின் நேர்மையான முறையில் ஆட்சி செய்தது. ஜனநாயக முறையில் செயல்பட்டது .ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்கவில்லை. அதனால் பயனாளர்களின் எண்ணிக்கை ,சம்பளத்தை குறைப்பதை நிறுத்த வேண்டும். அதேபோல் அம்மா மினி க்ளினிக் பெயர் மாற்றப்பட்டது கண்டத்திற்குரியது. திமுக அரசு தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தொடர்ந்து இயங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .  1,800 மருத்துவர்கள், 1420 மருத்துவ உதவியாளர்கள் பணி நீக்கம் செய்வதை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

EPS

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பெய்த கன மழையால் நெற்பயிர்கள் நாசமாகி உள்ளன.  இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தமிழக அரசு உடனடியாக நெற்பயிர் பாதிப்புகளை கணக்கிட்டு, விவசாயிகளின் துயரத்தை போக்க வேண்டும்.  அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும்.  ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் வழங்க வேண்டும். அத்துடன் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலமாக காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை அரசு விரைவில் பெற்றுத் தர வேண்டும்.7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. போயஸ் கார்டன் வழக்கில் அதிமுக கண்டிப்பாக மேல்முறையீடு செய்யும். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடாவடி செய்கிறார்  என்று தெரிவித்தார்.