தேனி தொகுதியில் அமுமுக தலைவர் டிடிவி தினகரன் போட்டி..!

 
1

 தேனி பாராளுமன்ற தொகுதியை ஆளுங்கட்சியான தி.மு.க. தக்க வைத்துள்ளது. இந்த தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறுசட்டமன்ற தொகுதியை கொண்டதுதான் தேனி பாராளுமன்ற தொகுதியாக இருந்து வருகிறது.

இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதுபோல் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றும் இருக்கிறார்கள். அதுபோல் டிடிவி தினகரன் முதன் முறையாக தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்றார். அந்த அளவுக்கு இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தும் பெற்றுள்ளது. இத்தொகுதியில் முக்குலத்தோர் சமூத்திற்கு அடுத்தபடியாக பட்டியலின சமூகத்தினர், கவுண்டர், நாயக்கர், செட்டியார், பிள்ளைமார், நாடார் உள்பட சில சமூகத்தினருடன் முஸ்லிம், கிறித்துவர்களும் வசித்து வருகிறார்கள். 

இத்தொகுதியை கடந்தமுறை தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கியதின் பேரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஓபிஎஸ் மகனான ஓபிஆர்இடம் தோல்வியை தழுவினார். ஆனால் இந்த முறை காங்கிரஸ் இத்தொகுதியை கேட்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆளுங்கட்சியான தி.மு.க. இத்தொகுதியில் போட்டிபோட முடிவு செய்ததின் பேரில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வனை வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

தேனியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கு கணிசமான ஆதரவு உள்ளது. இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவில் உள்ளதால் களம் அதிமுகவிற்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் தேனி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக அமுமுக தலைவர் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது