நள்ளிரவு பரபரப்பு… தவெகவிற்கு செல்ல எந்த விருப்பமும் இல்லை”- காணாமல்போன எம்.எல்.ஏ. பேட்டி
May 9, 2026, 08:05 IST1778294109686
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், ஆளுநரை சந்திக்க லோக் பவன் சென்றார்.
டிடிவி தினகரன், அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜை காணவில்லை என ஆளுநரிடம் புகார் அளித்த நிலையில் லோக் பவன் சென்றார்.
பின்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட அமமுக எம்எல்ஏ காமராஜூடன் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய காமராஜ், “ஆளுநர் மாளிகை செயலாளர் இடம் இருந்து அழைப்பு வந்தது உடனே இங்கு வந்துவிட்டேன். நான் தவெகவிற்கு ஆதரவு என்றால் நானே வந்து இருப்பேன். தவெகவிடம் தான் பெரும்பான்மை இல்லையே அவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? எனக்கு தவெகவிற்கு செல்ல வேண்டும் என எந்த விருப்பமும் கிடையாது. வாகனத்தில் வந்துகொண்டு இருந்ததால் டிடிவி தினகரனின் தொலைபேசி அழைப்பை எடுக்க முடியவில்லை.” என்றார்.

