அமமுக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 16, 17 தேதிகளில் நடைபெறுகிறது!

 
ammk ammk

அமமுக சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைந்து செயலாற்றிடும் வகையில் தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கழக பொதுச்செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்களுக்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கீழ்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இக்கூட்டங்களில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்க இருக்கிறார்கள்.
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இக்கூட்டங்களில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.