அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் அதிமுகவில் இணைந்தார்!

 
admk

அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், அமமுக கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை பொதுச்செயலாளராக அங்கீகரிக்ககோரி தேர்தல் ஆணையத்தில் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையமும் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரித்தது. இதனை தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனால் டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், அமமுக கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமமுக கட்சியில் இருந்த ஒரே பேரூராட்சி தலைவரான ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடதக்கது.