கொலை வழக்குகளில் இருந்து தப்பிக்க ஈபிஎஸ் திமுகவுடன் தொடர்பு- டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு
திரும்பத் திரும்ப சொல்கிறேன்.. 2026 தேர்தலில் அம்மாவின் அதிமுக கட்சிக்கு இபிஎஸ் மூடுவிழா நடத்துவார் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “எடப்பாடியிடமிருந்து அ.தி.மு.க வை மீட்டெடுப்பதுதான் நாளை ஜெயலலிதா நினைவு நாளில் எங்களது சபதம். முதல்வர் பதவி இருந்ததால், பணத்திமிரால் அ.தி.மு.க வை அபகரித்து வைத்திருக்கும் எடப்பாடி, 2026 தேர்தலுக்கு பின் அ.தி.மு.க விற்கு மூடுவிழா வைத்து விடுவார். எடப்பாடியிடம் இருக்கும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தூக்கத்தில் இருந்தால் அ.தி.மு.க விற்கு முடுவிழா தான். திமுகவின் தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக துணை போகின்ற கட்சியாக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்

கொலை வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், கைது நடவடிக்கைக்கு பயந்தும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க வுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறார். புதுச்சேரியில் வழங்கும் அளவிற்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வெற்றியாளர் யார் என்பதை தேர்தல் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.


