சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் இணைந்த ஓபிஎஸ்- டிடிவி தினகரன் ரியாக்சன்

 
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் இணைந்த ஓபிஎஸ்- டிடிவி தினகரன் ரியாக்சன் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் இணைந்த ஓபிஎஸ்- டிடிவி தினகரன் ரியாக்சன்

தஞ்சை விளார் சாலையில் வி.கே. சசிகலா கணவர் ம. நடராசன் நினைவிடத்தில் அவரது 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து  கொண்டு அவரது சமாதியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள்தான். தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்டுவதற்கு காரணமான கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை சோனியா காந்தியுடன் எடுத்துக் கூறி தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மேற்கொள்ளவில்லை. மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்குத் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கௌரவம் பார்ப்பது சரியாக இருக்காது. திமுகவை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும்” என்றார்.