“போயஸ் கார்டனில் இருந்த முக்கிய ஃபைல்கள்! எங்களுக்கு பிளாக்மெயில் செய்யும் பழக்கமில்லை”- டிடிவி தினகரன்

 
s s

பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “இபிஎஸ்ஸை வீழ்த்த திமுக சரியான இடம் என எண்ணி பலர் அங்கு செல்கின்றனர். அதிமுகவிற்கு எதிராக அமமுக தனது கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கொடநாடு பங்களாவில் எந்த ஃபைலை தேடினார்கள்? முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன. அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகளை நான் தான் கிழித்தெறிந்தேன். எங்களுக்கு பிளாக்மெயில் செய்யும் பழக்கமில்லை. அதனால் ஃபைல்களை கிழித்துவிட்டோம். நாங்கள் கிழித்த கோப்புகளில் பலரின் வண்டவாளங்கள் இருந்தன. 

கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சூழ்நிலையை யோசித்து பாருங்கள். கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார். நான் டெல்லியில் விசாரணையில் இருந்தேன். கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது யார் ஆட்சி நடந்து கொண்டிருந்தது? அரசாங்க ஃபைல்களை வைத்து மிரட்டி பணம் பறிக்க நான் சவுக்கோ சாட்டையோ இல்லை. தேர்தல் நேரத்தில் பாருங்கள் நாங்கள் என்ன செய்கிறோம் என்று... ஓபிஎஸ் எங்களுடன் இணைந்தால் அவர் உரிமை கோரிய வழக்கு சரியாக செல்லாது, எடப்பாடி பழனிசாமியை எளிதில் விட்டதுபோல இருக்கும். தற்போது செங்கோட்டையன் வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார். அவரும் அவரது பணியை செய்துகொண்டிருக்கிறார். 2021ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் தோற்றுப்போய் விடுவோமென அமித்ஷாவிற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தேன். அப்போத் என்னை சந்தித்த கிஷன்ரெட்டியிடம் கடிதம் கொடுத்தேன். நான் எடப்பாடி பழனிசாமியுடன் சேர வாய்ப்பே இல்லை.” என்றார்.