"தவெக குதிரை பேரம் செய்கிறது... காமராஜ் புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்தார்"- தினகரன்
தவெக குதிரை பேரம் செய்கிறது. அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என தவெக மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகள்.. த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்தவங்க எல்லாரோட பிண்ணனியையும் விசாரிக்கணும். மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், புதுச்சேரியில் விடுதியில் இருந்துள்ளார். போலியாக அவரது பெயரில் வந்த கடிதம் வந்துள்ளதை பார்த்து பயந்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். அவர் சென்னை வந்து என்னை பார்க்க வந்துள்ளார். யாரோ ஆளுநர் மாளிகைக்கு வாட்ஸ் அப் மூலம் கடித்ததை அவரது பெயரில் கொடுத்து உள்ளனர். ஆளுநர் அந்த போலியான பெயரில் வந்த கடிதத்தை படித்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தவெக குதிரை பேரம் செய்கிறது. அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

