"விஜய் தேர்தலில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்"- டிடிவி தினகரன்
எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றோ, அவரை முதலமைச்சராக ஏற்றோ NDA கூட்டணியில் அமமுக இணைய வாய்ப்பு இல்லை. எப்படியாவது கட்சி தன்னிடம் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். 2021ஐ விட 2026 தேர்தலில் மோசமான தோல்வியை அதிமுக சந்திக்க நேரிடும். அதிமுக ஆட்சியில் அமர்வதைவிட கட்சியைத் தனது கட்டுபாட்டில் வைத்திருப்பதே பழனிசாமியின் நோக்கம். ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. கட்சி கையில் இருந்தால் போதும் என நினைக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சீமான் பேச்சு சரியாக இல்லை. விஜய் தேர்தலில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். சீமானின் ஓராண்டு அரசியல் செயல்பாடுகளில் தடுமாற்றம் காணபடுகிறது. விஜய் மீது கோபம் இருந்தால், அவரை பற்றி சீமான் பேச வேண்டும். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் குறித்தா பேசுவது? அரசியலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்றார்.


