சொத்து வரியை 100% வரை உயர்த்திய திமுக அரசுக்கு வலுக்கும் கண்டனம்!!

 
ttv dhinakaran

சொத்து வரியை 100% வரை உயர்த்தியுள்ள  திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

tn govt
2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க, மத்திய அரசின்  15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. இதன் காரணமாக  மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழக முடிவெடுத்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்துவரியை உயர்த்தியுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும்,    600 முதல்  1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%,  1,201 முதல் 1,800 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 100%,  1,801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 150% சொத்து வரி உயர்வதாக அறிவித்துள்ளது.  இதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

tn

இந்நிலையில் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100% வரை உயர்த்தியிருக்கிற தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?கொரோனா பாதிப்புக்குப் பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்படத்தொடங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனச்சாட்சி இல்லாத செயல். எனவே, சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.