"பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை"

 
TTV DHINAKARAN

பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தினகரன் விமர்சித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து எதிர்க்கட்சி என்றால் பல்வேறு சம்பவங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.  பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி கொண்டுவர முடியாது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் , நிதி அமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து.  ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டுவரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம் என்று நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார் . இது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால்  சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது.

stalin

அதேபோல் புத்தாண்டு தினத்தில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோவில்களில் தரிசனம் செய்யலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார், அதே சமயம் 12 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி பயணம் செய்யக்கூடாது என தமிழக காவல் துறை உத்தரவிட்டுள்ளது.  இதனால்  தமிழக மக்கள் குழப்பம் அடைகிறார்கள் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

stalin

 இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "நாளை (31.12.2021) இரவு 12.00 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டி.ஜி.பி தடை விதிக்கிறார் ; அதே நாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என அறநிலைத்துறை அமைச்சர் சொல்கிறார். இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர் ; நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர்! தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை! " என்று பதிவிட்டுள்ளார்.