#AMMK நாட்டின் பிரதமராக மோடி அவர்களை மூன்றாவது முறையாக அரியணையில் ஏற்றுவோம்: டிடிவி தினகரன்

 
ttv dhinakaran ttv dhinakaran
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சியின் உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளையும் உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 

நாட்டின் பிரதமராக மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக அரியணையில் ஏற்றுவதோடு, தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த நாடாளுமன்ற தேர்தல் களம் அமையட்டும்." என்று பதிவிட்டுள்ளார்.