தேர்­தல் களத்­தில் கண்ட காட்சி! ‘திரா­விட மாடல்’அர­சின் சாத­னைக்கு சாட்சி!

 
tt tt

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை  நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்த வகையில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முரசொலி நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், 

இந்­தக் களத்­திற்­கா­கத்­தான் இவ்­வ­ளவு கால­மாக காத்­தி­ருந்­தோம். 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­தல் எனும் ஜன­நா­ய­கப் போரில் பாசிச பா.ஜ.க. அரசை தோற்­க­டித்து அவர்­களை பத்­தி­ர­மாக வீட்­டிற்கு வழி­ய­னுப்பி வைக்க வேண்­டும் என்­று­தான் ஜன­நா­ய­க­வா­தி ­­க­ளும், மக்­க­ளும் இவ்­வ­ளவு கால­மாக தேர்­த­லுக்­காக காத்­தி­ருந்­தார்­கள். தேர்­த­லும் வந்­து­விட்­டது. ஆனால் அவர்­கள் நிகழ்த்­தி­யுள்ள மத­வா­தம், மக்­கள் விரோ­தம் எனும் வெறி­யாட்­டத்தை எதிர்த்து போராட வேண்­டிய சூழ­லும் நமக்கு உரு­வா­கி­யி­ருந்­தது.

f

இந்­தியா எனும் உல­கின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாட்டை அவர்­கள் சிதைத்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள். மாநில அர­சு­களை மிரட்­டிக் கொண்­டி­ருந்­தார்­கள். சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்தி துன்­பு­றுத்­திக் கொண்­டி­ருந்­தார்­கள். அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை அவ­ம­தித்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள். ஏழை எளிய மக்­களை மறந்­து­விட்­டி­ருந்­தார்­கள். மொத்­தத்­தில் இந்­தியா என்­பது பல்­வேறு பண்­பா­டு­களை உள்­ள­டக்­கிய ஒன்­றி­யம் என்­ப­தையே மறைக்க முயற்­சித்­தார்­கள். இந்­திய மக்­க­ளின் கண்­ணில் காவிப் பொடியை தூவி­விட்டு கார்­ப­ரேட்­க­ளுக்கு சிவப்பு கம்­பள வர­வேற்பு கொடுத்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள். இத்­த­கைய ஆகப்­பெ­ரும் தீய சக்­தியை எதிர்த்து தேர்­தல் எனும் போரில் போரா­டத் தயா­ரா­கி­யிருந்­தோம்.

சொல்­லப்­போ­னால் கழ­கத் தலை­வர்-­ தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி போர்க்­க­ளத்­திற்கு சென்று கொண்­டி­ருந்­தோம். மக்­கள் எனும் ஆயு­தத்தை கொண்டே மக்­கள் விரோ­தி­களை விரட்­டி­ய­டித்து மக்­க­ளாட்­சியை மீண்­டும் நிலை­நாட்ட வேண்­டும் என்ற எண்­ணம் மட்­டுமே ஓடிக்­கொண்­டி­ருந்­தது. வெற்றி மட்­டுமே எங்­க­ளின் இலக்­காக இருந்­தது. எங்­க­ளுக்­கான முதல் தேர்­த­லா­க­வும் நாட்­டிற்­கான இறுதி வாய்ப்­பா­க­வும் கருதி தேர்­தல் பிரச்­சா ­ரத்தை தொடங்­கி­னோம். சொல்­லில் அடங்கா வேகம் எங்­க­ளுக்­குள் இருந்­தது. இது­போன்ற அனைத்து எண்­ணங்­க­ளை­யும் அந்த ஒற்றை சிரிப்பு அளித்­தது. எங்­க­ளுக்­கான நம்­பிக்­கையை அந்த ஒற்றை சிரிப்பு கொடுத்­தது.

2022 மார்ச் மாதம் 20’ஆம் தேதி எங்­கள் திருச்சி தெற்கு மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பாக தேர்­தல் பணி­களை துவங்­கி­ னோம்.

உறக்­கத்­தில் இருந்­த­வர்­களை உத­ய­சூரி­யன் எழுப்பி விட்­டி­ருந்­தான். தேர்­தல் பணி ஆலோ­சனை கூட்­டத்­திற்­காக மாவட்­டக் கழக அலு­வ­ல­கம் சென்று கொண்­டி­ருந்­தோம். அரசு சையது முர்­துசா மேல்­நிலைப் பள்­ளியை கடக்­கும் போது­தான் அந்­தச் சிரிப்பு எங்­களை ஆசு­வா­சப்­ப­டுத்­தி­யது. முத­ல­மைச்­ச­ரின் காலை சிற்­றுண்­டியை சாப்­பிட்ட குழந்தை தனது சீரு­டை­யின் வலது ­பக்க காலரை இழுத்து அழுத்தி வாய் துடைத்­து­விட்டு சென்­றது. என்­னைப் பார்த்து சிரித்­து­விட்டு தனது வகுப்­ப­றைக்­குள் ஓடி­யது. அந்­தச் சிரிப்­பு­தான் எங்­க­ளுக்­கான நம்­பிக்கை அளித்­தது. அது அந்­தக் குழந்­தை­யின் சிரிப்பு மட்­டு­மல்ல. காலை பள்­ளிக்கு அனுப்­பி­வைத்த 17 இலட்­சம் தாய் மற்­றும் தந்­தை­யின் சிரிப்பு. ‘இந்­தத் தேர்­த­லுக்­காக நாங்­க­ளும் ­காத்­துக்­கொண்­டி­ருந்­தோம்’ என்று சொல்­லி­யது அந்­தச் சிரிப்பு.

திருச்சி நாடா­ளு­மன்­றத் தொகுதி தவிர்த்து கரூர், தஞ்­சா­வூர், மயி­லா­டு­துறை ஆகிய நாடா­ளு­மன்­றத் தொகு­தி ­­க­ளுக்­கான ஒரு­சில சட்­ட­மன்­றத் தொகு­தி­ ­க­ளின் பொறுப்­பு­க­ளை­யும் கழ­கத் தலை­வர் அவர்­கள் எனக்குவழங்­கி­யி­ருந்­தார்­கள். அதன் பொருட்டு அந்­தந்த தொகு­தி ­­க­ளி­லும் பிரச்­சா­ரங்­களை மேற்­கொண்டு வந்­தோம்.

சுட்­டெ­ரிக்­கும் வெயிலை பொருட்­ப­டுத்­தா­மல் மக்­கள் எங்­க­ளுக்­காக காத்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள். எங்­க­ளின் பேச்­சையோ, எங்­க­ளின் பிரச்­சா­ரத்­தையோ கேட்­ப­தற்­காக அல்ல! ஏனென்­றால் ஒன்­றிய மோடி அர­சின் ஏமாற்று வேலை­கள் அனைத்­தை­யும் அவர்­கள் அறிந்தே வைத்­தி­ருந்­தார்­கள். அதே நேரத்­தில் திரா­விட மாடல் அர­சின் சாத­னை­க­ளை­யும் தெரிந்தே வைத்­தி­ருந்­தார்­கள். நாங்­கள் சொல்­லித்­தான் அவர்­க­ளுக்கு தெரிய வேண்­டும் என்­ப­தற்­கான சூழல் இல்லை! எங்­களை வர­வேற்­ப­தற்­காக மட்­டுமே அவர்­கள் காத்­தி­ருந்­தார்­கள். பாறை நீரை­யும் கூட உறிஞ்­சும் வேகத்­தில் வெயில் வாட்டி வதைத்­தது.

தஞ்­சா­வூர் பகு­தி­க­ளில் கழக வேட்­பா­ளர் முர­சொ­லியை ஆத­ரித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­கு­கள் சேக­ரித்­துக்­கொண்­டி­ருந்­தோம். பூத­லூர் பகு­தி­யில்பிரச்­சா­ரம் மேற்­கொண்­ட­போது விண்­ண­மங்­க­லம் வாய்க்­கால்­களை கடந்து செல்­லும் வாய்ப்பு கிடைத்து முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பகுதி. கடை­மடை பகு­தி­க­ளுக்­கும் காவிரி நீர் சீராக கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக, மேட்­டூர் அணை­யில் இருந்து தண்­ணீர் திறப்­ப­தற்கு முன்­பாக டெல்டா மாவட்­டங்­க­ளில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­வார்தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள். அந்­தப் பய­ணத்­தின் ஒரு­ப­கு­தி­யாக விண்­ண­மங்­க­லம் வாய்க்­கால்­கள் முறை­யாக தூர்­வா­ரப்­பட்­டுள்­ளதா என கடந்­தாண்டு ஆய்வு மேற்­கொண்­டார் முத­ல­மைச்­சர் அவர்­கள். இந்த வாய்க்­கால் மட்­டு­மல்­லா­மல் டெல்டா மாவட்­டங்­கள் முழு­வ­தும் நேர­டி­யா­கச் சென்று ஆய்வு மேற்­கொண்­டார். அதன் பிற­கு­தான் மேட்­டூர் அணை­யில் இருந்து தண்­ணீர் திறக்­கும் நிகழ்வை நடத்­தி­னார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

திரு­வை­யாறு சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட கிரா­மங்­க­ளில் பிரச்­சா­ரத்தை முடித்து­ விட்டு மதிய உண­வுக்­காக தஞ்­சா­வூர் சென்று கொண்­டி­ருந்­தோம். கழக இளை­ஞ­ரணி செய­லா­ளர், அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் திறந்து­வைக்­கப்­பட்ட மேம்­ப­டுத்­தப்­பட்ட அன்னைசத்யா விளை­யாட்டு அரங்­கில் இருந்து இளை­ஞர்­கள் வெளி­யே­றிக்­கொண்­டி­ருந்­தார்­கள். தனி­யார் அமைப்­பின் பங்­க­ளிப்­போடு மாவட்ட அள­வி­லான போட்­டி­கள் நடந்­து­கொண்­டி­ருப்­ப­தாக கேள்­விப்பட்­டேன். மேம்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­னர் காலை மற்­றும் மாலை நடை­ப­யிற்­சிக்­காக மட்­டும் பயன்­பட்ட அன்னை சத்யா விளை­யாட்டு மைதா­னம், தற்­போது இளை­ஞர்­க­ளின் விளை­ யாட்­டுப் போட்­டி­க­ளுக்­கா­க­வும், பயிற்­சி­களுக்­கா­க­வும் பயன்­பட்டு வரு­கின்­றது.

g

கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள் ஒரத்­த­நாடு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் 15’க்கும் மேற்­பட்ட இடங்­க­ளில் உரை­யாற்ற வேண்­டும் என முன்­னரே சொல்­லி­யி­ருந்­தார்­கள். ஓய்­வில்­லா­மல் தஞ்­சா­வூ­ரில் இருந்து ஒரத்­த­நாடு நோக்கி புறப்­பட்­டோம்.

ஒரத்­த­நாடு நக­ரில் பிரச்­சா­ரம் மேற்­கொண்ட போது மக்­க­ளால் அன்­போடு அழைக்­கும் “ஸ்டாலின் பஸ்” கம்­பீ­ர­மாக எங்­களை கடந்­து­கொண்­டி­ருந்­தது. கல்­லூரி மாண­வி­கள், குடும்­பப் பெண்­கள், வய­தான பாட்­டி­கள் என எல்­லோ­ரும் ஜீப்­பில் நின்­று­கொண்­டி­ருந்த எங்­க­ளைப் பார்த்து மகிழ்ச்­சி­யோடு கைய­சைத்து சென்­று­கொண்­டி­ருந்­தார்­கள். அது அவர்­க­ளின் மகிழ்ச்சி மட்­டு­மல்ல. தமிழ்­நாடு முழு­வ­தும் 460 கோடி முறை விடி­யல் பய­ணம் மேற்­கொண்ட பெண்­க­ளின் மகிழ்ச்சி. அவர்­க­ளின் உற்­சா­க­மும், மகிழ்ச்­சி­யும் எங்­க­ளுக்கு மென்­மே­லும் உத்­வே­கம் அளித்­தது. அவர்­க­ளின் அந்த மகிழ்ச்­சி­யும் ஜன­நா­ய­கத்­திற்­கான பிரச்­சார பீரங்­கி­கள்­தான்!

கரூர் நாடா­ளு­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட மணப்­பா­றை­யி­லும் தேர்­தல் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக கைகாட்­டி­யில் இருந்து புத்­தா­நத்­தம் வழி­யாக சென்­று­கொண்­டி­ருந்­தோம். “மணப்­பாறை அரசு கலை கல்­லூரி அருகே மதிய உணவை முடித்­து­வி­ட­லாம்” என கழ­கத் தோழர்­க­ளி­டம் சொல்­லி­யி­ருந்­தேன். அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் முயற்­சி­யால் மணப் ­­பா­றைக்­குக் கொண்டுவரப்­பட்ட அர­சுக் கல்­லூரி. மணப்­பாறை மக்­க­ளின் நீண்­ட­ நாள் கோரிக்­கையை நிறை­வேற்­றிய முத­ல­மைச்­சர் அவர்­கள் கல்­லூ­ரியை திறந்து வைத்­தார். அந்­தக் கல்­லூ­ரியை கடந்த சில இளை­ஞர்­க­ளில் ஒரு­வன் என்­ன­ரு­கில் வந்து “ஸ்டாலின் சாருக்கு நன்றி சொல்­லி­டுங்க சார். நான் அர­சுப் பள்­ளி­யில்­தான் படித்­தேன். இரவு நேரங்­க­ளில் வையம்­பட்டி சுங்­கச்­சா­வடி அருகே டீ விற்று சம்­பா­தித்து வரு­கின்­றேன். இனி­மேல் ‘தமிழ் புதல்­வன்’ திட்­டத்­தால் எனக்­கும் மாதம் 1000 ரூபாய் கிடைக்­கப் போகி­றது. இதை எனது மேல்­ப­டிப்­புக்­கா­கவோ அல்­லது எனது தங்­கை­யின் மருத்­து­வச் செல­வுக்­கா­கவோ பயன்­ப­டுத்­திக்­கொள்­வேன்’ என்­றான். இதேபோல செல்­லும் இட­மெங்­கும் “புது­மைப் பெண்” திட்­டத்­திற்கு நன்றி சொல்­லிக்­கொண்டே இருக்­கி­றார்­கள் மாண­வி­கள்!

அந்­தக் கல்­லூ­ரிக்கு அருகே மதிய உணவை முடித்து கிராம மக்­க­ளின் வர­வேற்பை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக புறப்­பட்­டோம். மணப்­பாறை பகு­தி­க­ளில் தேர்­தல் பிரச்­சா­ரங்­களை முடித்­து­விட்டு மயி­லா­டு­துறை நாடா­ளு­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட பாப­நா­சம், கும்­ப­கோ­ணம் பகு­தி­க­ளில் பிரச்­சா­ரம் மேற்­கொள்­வ­தற்­காக நாள்­களை ஒதுக்­கி­யி­ருந்­தோம்.ஆனால் அதற்கு முன்­ன­தாக திரு­வெ­றும்­பூர்பகு­தி­க­ளில் சில இடங்­க­ளில் வாகன பரப்­புரை மேற்­கொள்ள வேண்­டும் என்ற சூழல் உரு­வா­னது. திட்­ட­மி­ட­லில் இல்­லாத பணி­யாக இருந்­தா­லும், எனது மன­துக்கு நெருக்­க­மான பணி­யாக இருந்­தது.

கார­ணம் பல இடங்­க­ளில் நான் சொல்­வ­து­தான் “மற்ற இடங்­க­ளில் எல்­லாம் கூட்­டத்­திற்கு முன்பு நின்று நான் உரை­யாற்­று­வேன். ஆனால்திரு­வெ­றும்­பூ­ரில் மட்­டும்­தான்குடும்­பத்­திற்கு முன்பு நான் உரை­யாற்­று­வேன். ஏனென்­றால் திரு­வெறும்­பூர்­தான் எனது தாய்­வீடு!” திரு­வெ­றும்­பூர் பகு­தி­யில் வெற்றி வேட்­பா­ளர் திரு.துரை வைகோ அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக “தீப்­பெட்டி” சின்­னத்­திற்கு வாக்­கு­கள் சேக­ரித்­தோம். எல்.ஐ.சி.காலனி பகுதி­யில் பிரச்­சா­ரம் மேற்­கொண்­ட­போது, நலச்­சங்­கத்­தி­னர்­கள் வெளிப்­ப­டை­யாக ஒலி­பெ­ருக்­கி­யிே­லயே என்­னி­டம் சில கோரிக்­கை­கள் வைத்­தார்­கள். அப்­போது “முன்­பெல்­லாம் இப்­ப­கு­தி­யில் வந்து பணி­களைமேற்­கொண்டு வீட்­டிற்கு சென்­றால், இடுப்பு வலி­யும் கூடவே வீட்­டிற்கு வந்­து­வி­டும். அந்­த­ள­விற்கு சாலை­கள் இருக்­கும். ஆனால் இப்­போது நிலைமை அப்­ப­டி­யில்லை என்­பதை நினைக்­கும் போதே மன­நி­றை­வாக உள்­ளது” என எனது தொகுதி மக்­க­ளி­டம் பகிர்ந்­து­கொண்­டேன். கூடி­யி­ருந்த என் குடும்­பத்­தி­னர்­ ஆர்ப்­ப­ரித்து அதனை வர­வேற்­றார்­கள்.

தொடர்ந்து திரு­வெ­றும்­பூர் பகுதி முழுக்­க­வும் சுற்றி வந்­தோம். எனது தொகு­தி­யில் நான் மேற்­கொண்ட பணி­களை சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தற்­கான பய­ண­மா­க­வும் அது அமைந்­தது. எனது தொகு­தி­யில் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் சாலை வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளோம் என்றே தோன்­று­கி­றது.

கீழ­கல்­கண்­டார்­கோட்டை பகுதி மக்­க­ளின் 15 ஆண்­டு­கால கோரிக்­கையை நிறை­வேற்றி அமைக்­கப்­பட்ட சாலை­யில் சென்று, அதே பகுதி மக்­க­ளி­டம் உரி­மை­யோ­டும், மகிழ்ச்­சி­யோ­டும் வாக்­கு­கள் சேக­ரித்­தோம்.

tn

அதே போல பெரும்­பா­லான கிரா­மங்­க­ளில் சீரணி அரங்­கம், மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்­டி­க­ளை­யும் எனது சட்­ட­மன்­றத் தொகுதி மேம்­பாட்டு நிதி­யில் இருந்து அமைத்­துள்­ளோம். திரு­வெ­றும் ­பூர் தொகுதி மக்­க­ளின் அன்­பை­யும், அவர்­க­ளின் மேலும் சில கோரிக்­கை­களை­யும் பெற்­றுக்­கொண்டு தஞ்­சா­வூர் நோக்கி புறப்­பட்­டோம்.

சோழர்­கள் ஆண்ட உழ­வர் பூமி­யின் வயல்­வெ­ளி­கள் பச்சை நிறக்­கொ­டி­க­ளால் நிறைந்­தி­ருந்­தது. அதி­காலை நேரம். தஞ்­சா­வூ­ரில் இரவு தங்­கி­யி­ருந்த பிறகு திரு­வி­டை­ம­ரு­தூர் சென்­று­கொண்­டி­ருந்­தோம். தஞ்­சா­வூர் நெடுஞ்­சா­லையை அடை­வ­தற்கு முன்­பாக சாலை­யோ­ரத்­தில் மக்­கள் கூட்­டம். விபத்து என்­பது தெரிந்­தது. என்­னு­டன் வந்­து­கொண்­டி­ருந்த கழ­கத் தோழ­ரின் வாக­னத்­தில் காயம்­பட்­ட­வரை ஏற்றி மருத்­து­வ­மனை செல்­வ­தற்­காக ஆயத்­த­மா­னோம். ஆனால் அதற்­குள் சக மனி­தர் ஒரு­வர் காயம்­பட்­ட­வரை தனது காரில் ஏற்­றிக்­கொண்டு மருத்­து­வ­மனை விரைந்­தார். காவல்­துறை விசா­ரணை, ஏதே­னும் சிக்­கல்­கள் வருமா என்­பது பற்­றி­யெல்­லாம் அந்த சக மனி­தர் கவ­லைப்­ப­ட­வில்லை! ஏனென்­றால் சக மனி­த­ரின் இன்­னு­யிரை காப்­பாற்­றிய அவரை “இன்­னு­யிர் காப்­போம். நம்மை காக்­கும் 48 திட்­டம்” காப்­பாற்­றும்! காவல்­துறை விசா­ரணை உட்­பட வேறு எந்த சிக்­கல்­க­ளும் அவ­ருக்கு வராது!

மயி­லா­டு­து­றை­யில் கழ­கத் தோழர் ஒரு­வ­ரின் இல்­லத்­தில் இருந்த போது, விவ­சாய சங்­கத்­தி­னர்­கள் பலர் வந்­தி­ருந்­தார்­கள். அனை­வ­ரும் பல்­வேறு வித­மான கோரிக்­கை­களை முன்­வைத்­தார் ­கள். அதே நேரத்­தில் அவர்­கள் அனை­வ­ரும் ‘இவ்­வ­ளவு திட்­ட­மி­டு­த­லோடு விவ­சா­யத்­திற்­கான திட்­டங்­களை இதற்கு முன்­னர் யாரும் தீட்­டி­ய­தில்லை! நானும் டெல்­டா­கா­ரன்­தான் என்ற முத­ல­மைச்­ச ­ரின் சொல் பேச்­ச­ள­வில் மட்­டு­மல்ல. செய­லி­லும் உள்­ளது. குறிப்­பாக வேளாண் சட்­டங்­களை எதிர்த்­த­தற்­கும், எங்­க­ளுக்­கான வேளாண் பட்­ஜெட் முறையை கொண்டு வந்­த­தற்­கும் நன்­றி­கள்’ எனத் தெரி­வித்து தங்­க­ளின் பேரா­த­ரவை தி.மு.க. தலை­மை­யி­லான இந்­தியா கூட்ட­ணிக்கு வழங்­கு­வ­தாக தெரி­வித்­தார்­கள்.

anbil magesh

திரு­வி­டை­ம­ரு­தூர், பாப­நா­சம் ஆகிய சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் பிரச்­சா­ரம் மேற்­கொண்­டோம். வீர­மாங்­குடி கிராம பகு­தி­களை ஒட்டி பரப்­பு­ரை­யில் ஈடு­பட்­ட­போ­து­தான், ரூ.10.93 இலட்­சம் மதிப்­பீட்­டில் கட்­டப்­பட்டு என்­னால் திறந்­து­வைக்­ ­கப்­பட்ட அங்­கன்­வாடி மையத்தை கடந்­தோம். திறப்பு விழா­வில் நடந்த சுவா­ர­சி­யம் இன்­னும் நினை­வில் உள்­ளது. கல்­விப் பாதை­யில் அடி­யெ­டுத்து வைக்­கும் குழந்­தை­கள் அங்­கன்­வாடி மையத்­திற்­குள் புது உடை­யில் இருந்­தார்­கள். அச்­சூ­ழ­லைப் பார்த்து அவர்­கள் கூட யாரும் அழ­வில்லை! அங்­கன்­வாடி மையத்தை திறந்து அவர்­க­ளுக்கு இனிப்­பு­கள் வழங்­கி­விட்டு, வாக­னத்­தில் ஏறு­வ­தற்­காக வந்­த­போ­து­தான் கவ­னித்­தேன். ஒரு சிறு­வ­னின் அழுகை அங்கு வந்­தது முதல் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தது. காரில் உட்­கா­ரும் போது ஏன் என்று விசா­ரித்­தேன். “ஒன்­னரை வரு­ஷம்­தான் சார் ஆகுது. இன்­னும் சாப்­பிட கூட இவன் ஆரம்­பிக்­கலை. அவங்க அக்கா மாதி­ரியே புது டிரஸ் வேணும், உள்ள போய் அவ­ளோட உட்­கா­ர­ணும் சொல்லி அழு­கு­றான்” என்­றாள் அவ­னின் தாய். அங்­கி­ருந்த அனை­வ­ரும் சிரித்­தார்­கள்.

இதை எழு­து­வ­தற்கு இரண்டு நாள்­கள் முன்­ன­தாக பேரா­வூ­ரணி பகு­தி­யில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்­காக வாக்­கு­கள் சேக­ரித்­துக்­கொண்­டி­ருந்­தோம். ஒரு கட்­டத்­தில் எனது பிரச்­சார சத்­தத்தை கடந்து அங்கே கூடி­யி­ருந்த பெண்­க­ளின் ஆர­வா­ரம் அதி­க­மாக கேட்­டது. அனை­வ­ரும் தங்­க­ளின் அலை­பே­சியை எடுத்து என்னை நோக்கி காட்­டி­னார்­கள். “ஸ்டாலின் சார் பணம் போட்­டுட்­டார்” என கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகையை குறிப்­பிட்டு சொன்­னது என்னை நெகிழ வைத்­து­விட்­டது. அவர்­களின் அந்த ஆர­வா­ரம் பாசிச அரசை வீட்­டிற்கு அனுப்பி வைக்­கும் வரை­யி­லும் தொட­ரும் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை!

செல்­லும் இட­மெங்­கும் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் திரா­விட மாடல் திட்­டத்­தின் முகங்­களை மகிழ்ச்­சி­யோடு பார்க்க முடிந்­தது. திண்­ணை­யில் அமர்ந்து வய­தான பாட்­டி­யு­டன் உரை­யா­டிக் கொண்­டி­ருந்த மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டத்­தின் தன்­னார்­வ­லர், ஓட்டு வீட்­டின் முன்­பான களத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இல்­லம் தேடிக் கல்வி மையம் என நாங்­கள் களத்­தில் கண்ட திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­கள் அனைத்­தும் எங்­க­ளுக்­கான வலி­மையை கொடுத்­தது. “கல்­வி­யும் சுகா­தா­ர­மும் எனது இரு கண்­கள்” என்று சொன்ன தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வார்த்­தை­யின் உண்­மையை முழு­மை­யாக உணர்ந்­தோம்.


தமிழ்­நாட்டு மக்­க­ளின் மகிழ்ச்­சி­யும், ஆர­வா­ர­மும் எங்­க­ளுக்­கான நம்­பிக்­கையை அளித்த அதே வேளை­யில் காங்­கி­ரஸ் பேரி­யக்­கத்­தின் தேர்­தல் அறிக்கை மக்­க­ளுக்கு பெரும் நம்­பிக்­கையை கொடுத்­தது.

திரா­விட இயக்­கம் வலி­யு­றுத்­தும் சமூ­க­ நீதி, சமத்­து­வத்தை முன்­னி­றுத்தி, கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் தேர்­தல் அறிக்­கையை பிர­தி­ப­லித்து வெளி­யி­டப்­பட்­டுள்ள காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்கை ஜன­நா­ய­கப் போருக்­கான கூடு­தல் ஆயு­தத்தை வழங்­கி­யது.

ஒவ்­வொரு ஏழை இந்­திய குடும்­பத்­திற்­கும் ஆண்­டு­தோ­றும் ரூ.1 லட்­சம் வழங்­கும் வகை­யி­லான ‘மகா­லட்­சுமி’ என்­னும் திட்­டம், மருத்­து­வப் படிப்­பு­க­ளுக்­கான நீட் நுழை­வுத்­தேர்வு, மத்­தியபல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கான CUET எனும்பொது நுழை­வுத்­தேர்வு போன்ற நாடு தழு­விய நுழை­வுத்­தேர்­வு­கள் குறித்து அந்­தந்த மாநி­லங்­கள் முடி­வெ­டுக்­க­லாம், கல்­விக் கடன்­கள் ரத்து, ஜி.எஸ்.டி. ஏழை­களை பாதிக்­காத வண்­ணம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் என்­றும் ஜி.எஸ்.டி. கவுன்­சில் மாற்றி வடி­வ­மைக்­கப்­ப­டும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் இந்த வாக்­கு­று­தி­களை இந்­தியா கூட்­டணி கட்­சி­கள் அனை­வ­ரும் வர­வேற்­றார்­கள். அவர்­க­ளுக்கு கூடு­தல் பலத்தை இந்­தத் தேர்­தல் வாக்­கு­று­தி­கள் அளித்­தது. மென்­மே­லும் உறக்­க­மில்­லா­மல், ஓய்­வில்­லா­மல் தேர்­தல் பணி­க­ளில் தங்­களை ஈடு­ப­டுத்­திக்­கொண்­டார்­கள்.

“யார் பிர­த­ம­ராக வர வேண்­டும் என்­பதை விட யார் பிர­த­ம­ராக வரக்­கூ­டாது என்­ப­தில் தெளி­வாக இருக்க வேண்­டும்” என்று சொன்ன தலை­வர் அவர்­க­ளின் வழி­யில் மக்­கள் சிந்­திக்­கத் தொடங்­கி­விட்­டார்­கள். ஜன­நா­ய­கத்­திற்­கான வெற்றி உறுதி என்­ப­தில் சந்­தே­கம் இல்லை.

கதிர் அரி­வா­ளால் அறு­வடை செய்து

ஏணி ஏறிதோர­ணம் கட்டி

பானைக்கு வர்­ணம் பூசி

அரி­வாள் சுத்­தி­ய­லால் கரும்பு வெட்டி வெல்­லம் உடைத்து

தீப்­பெட்­டி­யால் தீ மூட்டி

கைக­ளால் பொங்­க­லிட்டு

உதய சூரி­ய­னுக்கு வெற்­றியை பொங்க வைப்­போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.