பள்ளிகள் திறப்பு தேதி மாற்றமா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மே மாத இறுதியில் பதிவாகும் வெப்பநிலையைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுவது குறித்து முடிவெடுப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் மாதம் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம், தொடர்ந்து அதிகமானால், மே மாத இறுதியில் பதிவாகும் வெப்பநிலையைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுவது குறித்து முடிவெடுப்போம். வெயிலின் தாக்கத்தை பொறுத்து, முதல்வரின் அறிவுறுத்தல் பெற்று பள்ளிகள் திறக்கப்படும். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்” என்றார்.


