பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? - அட்டவணையை வெளியிட்ட அன்பில் மகேஷ்

 
anbil anbil

1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப். 18-ல் தொடங்கி 26-ம் தேதி நடைபெற இருப்பதாகவும், 27-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

anbil magesh

பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது என்ற அட்டவணையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதன்படி, 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப். 18-ல் தொடங்கி 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது, 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடைகிறது. 24.12.2025 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.