"CBSE பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக அரசின் பாடத்திட்டம் உள்ளது”- அன்பில் மகேஷ்

 
anbil magesh

தேசியக் கல்விக் கொள்கையுடன் ஒப்பிடுகையில் மாநில பாடத் திட்டம் மோசமாக உள்ளது என விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

anbil magesh

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது. போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். மாநில பாடத்திட்டத்தைப் படித்து எத்தனை பேர் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தேர்வாகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு ஆளுநர் முடிவுக்கு வர வேண்டும்.

மத்திய அரசு தேர்வுகளுக்கே மாநில பாடத் திட்டத்தின் புத்தகங்களைத் தான் மாணவர்கள் படிக்கிறார்கள். TNPSC மட்டுமல்ல UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளே நம்முடைய மாநில அரசின் புத்தகங்களை தான் தேர்வு செய்து படிக்கிறார்கள். CBSE பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக அரசின் பாடத்திட்டம் உள்ளது” என்றார்.