பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! அன்புமணி பங்கேற்காதது ஏன்?
தைலாபுரத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளில் பாமக வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கடலூர், சேலம், ஈரோடு, அரியலூர், தஞ்சை, திருவள்ளூர், கோவை ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுச்சேரியை சார்ந்த மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள் என 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாமகவில் 91 மாவட்ட செயலாளர்கள் 91 மாவட்ட தலைவர்கள் உள்ள நிலையில் 15 மாவட்ட தலைவர்கள், 15 மாவட்ட செயலாளர்கள் என மொத்தமாக 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சரியாக 11 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்றதில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாமக 50 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவது குறித்தும், தேர்தலுக்கான வியூகங்கள், குறித்து ஆலோசனையை ராமதாஸ் வழங்கியதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிர்வாகிகளிடம் கேட்டதாக மாவட்ட செயலாளர்கள் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்தார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மாநாடு முடித்து சென்றுள்ளதால் கூட்டத்திற்கு வரவில்லை, அன்புமணி ராமதாஸ் பல்வேறு பணிகளில் இருப்பதால், அவரும் வரவில்லை என பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்தார்.


