பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி ராமதாஸ்!

 
pmk pmk

பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று கூட்டியுள்ள மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை. 

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் கூட்டணி முடிவு, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.  பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் மோதல் நிலவி வந்த நிலையில், இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று கூட்டியுள்ள மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை. கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது.