சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் வாழ்த்து

 
anbumani

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் சீமானின் பிறந்த நாளை நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 


இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது எஸ்க் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.