தேர்தல் ஆணையம் செல்கிறார் அன்புமணி..!! பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு??

 
தேர்தல் ஆணையம் செல்கிறார் அன்புமணி..!! பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு?? தேர்தல் ஆணையம் செல்கிறார் அன்புமணி..!! பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு??


டெல்லி சென்றுள்ள அன்புமணி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் ஆணையம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாமக விவகாரத்தில் ராமதாசுடன் மோதல் முற்றிய நிலையில் அன்புமணி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.   பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல்போக்கு இருந்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் பலக்கட்ட  சமாதான  பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.  இதற்கிடையில், ராமதாஸ், தமிழகம் முழுவதும்  ஒங்காக செயல்படாத மற்றும்  பாமகவில் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார்.

 அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார்.  அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவே இரண்டாக பிளவுபட்டுக் கிடக்கிறது.  கட்சியில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலரும் மாறி மாறி வார்த்தைப்போர் நடத்தி வருகின்றனர்.  இதனிடையே பாமகவின் தலைவர் நான் தான் என்றும், இறுதி மூச்சு உள்ளவரை நானே தலைவராக இருப்பேன் என்றும் அன்புமணி தெரிவித்திருந்தார். அன்புமணி செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என்றும் திட்டவட்டமாக கூறினார்.  

anbumani

அதேநேரம் 99 சதவீத நிர்வாகிகள் தன் பக்கமே இருப்பதால் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான தனக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும் அன்புமணி ஒருபக்கம் கூறி வருகிறார். இதனிடையே சட்டப்பேரவை தேர்தலில்  தன்னால் நியமிக்கப்படுபவர்களுக்கே தேர்தலில் சீட் கொடுக்கப்படும் என்றும், தனக்கே முழு அதிகாரமும் இருப்பதாக தெரிவித்தார்.  இதனால் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள அன்புமணி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் ஆணையம் செல்ல உள்ளார்.  கட்சியில் தனக்கே அதிகாரம் இருக்கிறது என்பதை உறுதி செய்யவும், தேர்தல் நேரத்தில் வேட்பாளர் தேர்வு செய்வதில்  எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கவும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து அன்புமணி மனு அளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோயையும் அன்புமணி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.