வஞ்சனையாலும், சூது செய்தும் கட்சியை பறிக்க முயல்கிறார் அன்புமணி..! - ராமதாஸ் கடும் தாக்கு..

 
ramadoss ramadoss


தன்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் கூறுகிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “என்னை சந்திக்க வந்ததாகவும், அதை நான் மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார். தைலாபுரம் இல்லத்திர்கு என்ன சந்திக்க அன்புமணி வரவும் இல்லை, நான் கதவை அடைக்கவும் இல்லை. கட்சியை உறுஞ்சி எடுத்து, நான் தான் கட்சி என்று சொல்ல அன்புமணி துடிக்கிறார்.  

anbumani with ramdass

அன்புமணிக்கு நான் வழங்கிய பாமக தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியகிவிட்டது.  அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்க கூறினேன். களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்காமல் அவர் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்.  நான்தான் தலைவர் என்று சொல்லிக்கொண்டு அன்புமணி  என்னவெல்லாமோ செய்கிறார்.  

பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள். பை பையாக பொய்களை வைத்துள்ளார் ; வாய்கூசாமல் பொய் சொல்வார் அன்புமணி. அவர் வஞ்சனையாலும், சூது செய்தும் கட்சியை பறிக்க முயல்கிறார். பாமகவின் நிறுவனரும், தலைவரும் நானே” என்று ராமதாஸ்  திட்டவட்டமாக தெரிவித்தார்.