சீமான் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன் - அன்புமணி வாழ்த்து

 
anbumani

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்த வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சீமானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதள பக்கத்திலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்த வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது  உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.