அன்பு, மகிழ்ச்சியின் அகிலம் தான் குழந்தைகள் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குழந்தைகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு, மகிழ்ச்சியின் அகிலம் தான் குழந்தைகள்: அவர்களின்றி உலகில் எதுவும் இல்லை. அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை நிறைய வேண்டுமா? அதற்கு உங்கள் வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் போதுமானது. அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் அகிலம் அவர்கள்.
அன்பு, மகிழ்ச்சியின் அகிலம் தான் குழந்தைகள்: அவர்களின்றி உலகில் எதுவும் இல்லை!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 14, 2024
அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை நிறைய வேண்டுமா? அதற்கு உங்கள் வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் போதுமானது. அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் அகிலம் அவர்கள். அவர்களின் உலகில் வஞ்சம்,…
அவர்களின் உலகில் வஞ்சம், வெறுப்பு. பொறாமை, பகைமை உள்ளிட்ட எதற்கும் இடமில்லை. அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்.... ஆனால், குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவர்களின்றி உலகில் எதுவும் இல்லை. அவர்களை நாம் கொண்டாடுவோம். குழந்தைகளைப் போன்ற உள்ளங்களைப் பெற முயற்சி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார். அன்பு, மகிழ்ச்சியின் அகிலம் தான் குழந்தைகள் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!