முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

 
anbumani and stalin anbumani and stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதஸ் இன்று சந்தித்து பேசினார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. என்.எல்.சி விவகாரம், வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன் என கூறினார்.