விவசாய நிலங்களை அழித்து என்எல்சிக்கு ஆதரவாக எதற்காக அரசும், அமைச்சர்களும் நிற்கின்றனர்?- அன்புமணி ராமதாஸ்

 
அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றது. இதற்கு உரிய முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Image

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கடலூர் மாவட்டத்தில் என்எல்சியில் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் கூடுதல் விலையில் நிலம் கையகப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பாமக சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றோம். தற்போது தமிழகத்தில் காற்றாலை, சூரிய ஒளி மூலமாக 36,000 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகின்றது. ஆனால் என்எல்சி மூலமாக 800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருகின்றது. பசுமையாக வளர்ந்து வரும் நிலத்தை அழித்து தயாரிக்கப்படும் மின்சாரம் பிற மாநிலத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 

தமிழக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடுகிறார்கள். ஆனால் விளை நிலத்தை நாசப்படுத்தும் வகையில் தற்போது 3-வது சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த போவதாக தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் என்எல்சி நிர்வாகம் 65 ஆயிரம் ஏக்கர் நிலத்தை குத்தகையாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் பாதிப்படைந்து வருகிறது. ஆகையால் விவசாயத்தை பாதுகாக்க குத்தகையை ரத்து செய்து அக்கறையுடன் அரசு இருக்க வேண்டும். மேலும் என்எல்சி 3-வது சுரங்கத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கி உள்ளது. 

இதன் மூலம் 26 கிராமத்தில் இருந்து நிலம் கையகம் படுத்தவுள்ளனர். இதில் ஒன்பது கிராமமான காவிரி, டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தமிழகம் முதலமைச்சர் நானும் டெல்டாக்காரன் என கூறுகிறார். சட்டமன்றத்தில் 100 சதவீதம் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். ஆனால் என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் செயல்படுகிறது? இது சம்பந்தமாக சரியான முறையில் எந்த தகவலும் தெரிவிக்க மாட்டார்கள். ஆகையால் பாமக என்றும் மண், மக்களை காப்பாற்ற வேண்டும். விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். 

அன்புமணி

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெல் உற்பத்தியில் 4-வது மாவட்டமாக இருந்து வருகின்றது. ஆனால் என்எல்சி மூலமாக சொற்ப மின்சாரம் தயாரிப்பதற்காக என்எல்சிக்கு தமிழக அரசு ஏன் ஆதரவாக உள்ளது? இதற்கு தமிழக முதலமைச்சர் பதில் கூற வேண்டும். கடலூர் சிப்காட் பகுதியில் வசிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக தற்போது ஆய்வறிக்கையில் கூறப்பட்டு வருவது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இது மட்டும் இன்றி சைமா தொழிற்சாலை மூலமாக பரங்கிப்பேட்டை பகுதியில் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாய கழிவுகளை பைப் மூலமாக கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு அதனை சுத்திகரித்து கடலில் விடப்போவதாக தெரியகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

கடலூர் மாநகரத்தில் மருத்துவ கல்லூரி கண்டிப்பாக அமைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரியை 115 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. ஆனால் சரியான முறையில் தூர்வாராமல் பெருமளவில் ஊழல் நடந்து வருகின்றது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்டு உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். மதுவிலக்கு குறித்து தமிழக அரசு பேச்சு மூச்சு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என முதலமைச்சர் கூறியது என்ன? நிலையில் உள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.