“ஸ்மார்ட் மிதிவண்டிகளை காணவில்லை”... அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்
Updated: Sep 4, 2024, 19:14 IST1725457452152
சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, சகோதரரே, எப்போது சென்னையில் நாம் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம் என நகைச்சுவையாக கூறினார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே? சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டி பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.