குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுங்குற்றம் - குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா?

 
tn

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமலும் அவர்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மலத்தை கலந்து சில விஷமிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்த நிலையில்,  இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

tn

இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில்  ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து  வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.  

ttn

இதனிடையே  11 பேரை இந்த வழக்கில் சந்தேகப்படுவதாகவும்,  அவர்களுடைய டிஎன்ஏவை பரிசோதனை செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்த நிலையில் , இதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  இதையடுத்து  டிஎன்ஏ பரிசோதனைக்கு வர  8 பேருக்கு  நீதிமன்ற அனுமதியுடன் சிபிசிஐடி காவல் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. 



இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  நடந்த இரட்டைக் கொலை  வழக்கில்  துப்புதுலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது மிகவும் சரியான செயல். ஊக்குவிப்பு தான் காவல்துறையினருக்கு உத்வேகம் அளிக்கும்.  நானும் பாராட்டுகிறேன். அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து இன்றுடன் 5 மாதங்கள் 6 நாட்களாகிவிட்டது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பாரா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.